தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா இன்று (செப்.12) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. விஜய்யின் கொள்கை என்பது நீட்டை எதிர்ப்பது, கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வருவதாகும். இதனால், தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகளுக்குத்தான் விஜய் போட்டியாக இருப்பார். திராவிடக் கட்சிகளின் வாக்கைத்தான் அவர் பிரிப்பார்” என்றார்.