ஆவடி |

முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் புழல் ஒன்றியம் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ. வி. செழியன் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் உறுதிமொழியை ஏற்றனர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ. வி. செழியன் பேசுகையில் திமுக இயக்கத்தில் அடிமட்ட தொண்டனாக எவன் உழைத்தாலும் அவன் உயர்த்தப்படுவான் அதுதான் திராவிட மாடல் முதல்வர் தொண்டனுக்கு அளித்த பரிசுதான் அமைச்சர் பதவி என்றும் அனைத்தையும் நிறைவேற்றி மக்களிடம் ஓட்டு போடுங்கள் என கேட்கும் துணிச்சல் திமுகவை தவிர தமிழகத்தில் எந்த கட்சிக்காரனுக்கும் கிடையாது என்றும் அதிமுக ஆட்சி போன பிறகு கட்சி வேட்டியை சலவைகடைக்கு போட்டுவிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பேர் சாதாரண வேட்டியோடு சுற்றுகின்றனர் என்றும் ஆளும் கட்சியாக இருக்கும்போது திமுக தொண்டன் வேட்டி கட்டுவதை விட எதிர்கட்சியாக இருக்கும்போது கூடுதலாக கம்பீரமாக வேட்டி கட்டி உலாவருவான் அதுதான் திமுகவின் சொத்து என தெரிவித்தார்.

வீடியோஸ்


தமிழ் நாடு