கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஏப்., 03) விவாதம் நடைபெற உள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா மீது நள்ளிரவு வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. வக்பு வாரிய சொத்துக்களை மத்திய அரசு அபகரிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின.