தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக வரும் ஏப்., 05ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.