தீபாவளி பூஜை: எந்த நேரத்தில் வழிபடுவது நல்லது?
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று (அக்.31) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பண்டிகையை கொண்டாடும் விதமாக மாலை நேரத்தில் பூஜை செய்வதன் மூலம் லக்ஷ்மி தேவி வீட்டிற்கும், குடும்பத்திற்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்குவார் என நம்பப்படுகிறது. அந்த வகையில், இன்று மாலை 6.27 மணி முதல் இரவு 8.32 மணி வரை லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரமாகும். சிலர் அசைவம் சாப்பிட்டதால் பூஜை செய்ய முடியாது. அவர்கள், நாளை (நவ.1) மாலை இந்த பூஜை செய்யலாம்.