“கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான். காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது. வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திரா காந்தி. இப்போது மீனவர்கள் தங்களது உரிமை வேண்டும் என சொல்கிறார்கள். அதற்காக அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.