திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் முடிக்கப்படாததால் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் திருவள்ளூர் பகுதிகளுக்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது, மேலும் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் ரயில்வே இருப்புப் பாதையை கடந்து வரும் நிலையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதால் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கிற பிரகாசம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேம்பாலப் பணிகளை வரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது