மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்.28) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில், இடிபாடுகளுக்கு கீழ் சிக்கி இருந்த நபர் ஒருவர் ஐந்து நாள்களுக்கு பிறகு நேற்று மீட்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் நைங் லின் துன் என்பவர் நைப்பிடோவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டார். பின் பாயின்ட் கேமரா மூலம் தேடியதில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.