கடலூரில் ரவுடி விஜயை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது குறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில், “3 இடங்களில் லாரி டிரைவர்களை அரிவாளால் விஜய் உள்ளிட்டோர் வெட்டியிருக்கிறார்கள், முன்னரும் இதுபோல் செய்தனர். அந்த கும்பலுக்கு தலைவனாக விஜய் இருந்தார். புதரில் இருந்து வெளியே வந்து காவலர் கோபியை வெட்டி, பின்னர் காவலர் கணபதியை வெட்டியதையடுத்தே என்கவுண்டர் செய்யப்பட்டார்" என்றார்.