2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றார் பிரதமர் மோடி

83பார்த்தது
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து மோடி இலங்கைக்கு செல்கிறார். மீண்டும் 6ஆம் தேதி இலங்கையில் இருந்து இந்தியா திரும்புவார்.

தொடர்புடைய செய்தி