வக்ஃப் சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறது. வக்ஃப் சட்டம் 1995ல் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், முஸ்லீம் சமூகத்தின் நலனுக்கு கடும் பாதிப்புகளை விளைவிப்பதாக உள்ளது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.