தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு குறித்து விவாதம் நடந்தபோது, காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார். உடனே ஆவேசமான செங்கோட்டையன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி கத்தினார். அம்மாவைப் பற்றி அவர் விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா என பேசினார். இதனையடுத்து அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் செல்வப்பெருந்தகை பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.