கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த ரவுடி முட்டை விஜய் (19) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் எம்.புதூர் பகுதியில் பதுங்கி இருந்த அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி விஜய் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை கடந்த 26ஆம் தேதி போலீசார் துரத்திச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.