அமெரிக்கா விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளில் தங்கத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெள்ளி மற்றும் மருந்து பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராக்கெட் வேகத்தில் உச்சம் தொட்டிருக்கும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்கம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.114-க்கு விற்பனையானது. வரும் நாட்களில் தங்கம் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.