இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியுள்ளது. சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector.in தரவுகளின்படி, பிற்பகல் முதல் இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு UPI சேவை முடங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Paytm, Google Pay மற்றும் PhonePe போன்ற UPI பயன்பாடுகளிலும், SBI போன்ற வங்கி பயன்பாடுகளிலும் UPI சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து 59 சதவீத பயனர்கள் புகாரளித்துள்ளனர்.