கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த Travel vlogger ஷஃபீக் ஹஷிம் வழுக்கை தலையில் தற்காலிகமாக பச்சைக்குத்தி விளம்பரம் செய்து வருமானம் ஈட்டிவருகிறார். இளம் வயதிலேயே தலைமுடி கொட்டியதால் வேதனை அடைந்ததால், இவரைபோல் இருக்கும் பலருக்கு உத்வேகம் அளிப்பதற்காக இதை செய்கிறார். இந்த யுக்தியை அறிந்து 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விளம்பரம் செய்ய முன்வந்துள்ளனர். இதற்காக 3 மாதங்களுக்கு ரூ.50,000 வசூலிக்கிறார்.