தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் கறிக்கடை முன்பு பிணத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மயான பணியாளர் குமார் என்பவர், மணியரசன் என்பவருக்கு சொந்தமான இறைச்சிக் கடையில் இலவசமாக இறைச்சி கேட்டுள்ளார். அதற்கு மணியரசன் மறுக்கவே அருகில் இருந்த மயானத்தில் இருந்து புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து தொழில் சுமந்து வந்து கறிக்கடை முன்பு வீசியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் பிணத்தை கைப்பற்றினர். குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.