மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பாஜக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு வெளிப்படையாக மிரட்டுகிறது. தமிழக மாணவர்களுக்கான ரூ.2,512 கோடியைப் பறித்து, பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. தமிழக மாணவர்களின் உரிமைகளுக்காக அரசு நின்றதற்காக தமிழகம் தண்டிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.