தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மதுரையில் மத வேறுபாடுகள் இன்றி அண்ணன் தம்பிகளாகத்தான் வாழ்ந்துவருகிறோம். இப்படியொரு பிரச்னையையே இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட குழப்பமே நவாஸ் கனி எம்.பி வந்து சென்ற பின்புதான் கிளம்பியது. பிறகு, தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்து முன்னணியினரும், பா.ஜ.க-வினரும் பதில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்தப் பிரச்னைக்கான முழுப் பொறுப்பையும் தி.மு.க அரசுதான் ஏற்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.