தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் மற்றும் தேனி மாவட்ட புதிய ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளனர்.