கேரளா மாநிலம் மலப்புரம் நிலம்பூரில் திருவிழா ஊர்வலத்திற்காக மாரியம்மன் தேவி கோயிலுக்கு கோவிந்தன்குட்டி என்ற யானை கொண்டுவரப்பட்டது. அப்போது அந்த யானைக்கு மதம்பிடித்துள்ளது. இதனால் பாகனின் கட்டுப்பாட்டை மீறி அந்த யானை அங்கும் இங்கும் ஓடியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தலைதெறிக்க ஓடினர். இந்நிலையில் அந்த யானை ஸ்கூட்டர் ஒன்றை ஃபுட்பால் தனது தும்பிக்கையால் தூக்கி எறிந்தும், கால்களால் மிதித்தும் ஆக்ரோஷமாக இருந்த காட்சி வெளியாகியுள்ளது.