கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியில்லாமல் சேர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் மாதம்தோறும் ஆய்வு செய்யப்பட்டு நீக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணிப்பபவர்கள் என எல்லோருடைய விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.