தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மற்ற மாநிலங்களுக்கு வழங்கியிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.