'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் 8 பாகம் உருவாக்கி வருகிறது. இப்படத்திற்கு "மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்" என்று பெரியடப்பட்டுள்ளது. டாம் குரூஸ் மீண்டும் ஈதன் ஹன்ட் வேடத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற மே மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 62 வயதான டாம் குரூஸ் தலைகீழாக பறக்கும் விமானத்தில் தொங்கும்படி இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதில் டாம் குரூஸ், டூப் எதுவும் போடாமல் தனே அந்தரத்தில் தொங்கும் படி நடித்து காட்டியுள்ளார்.