உலகம் முழுவதும் காதலர் தின காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், தைவானின் தைபே நகரத்தில், காதலர் தினத்தை முன்னிட்டு, முத்தமிட்டுக் கொண்டே கணக்குகளுக்கு தீர்வு அளிப்பது, முத்தம் கொடுத்துக் கொண்டே உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பல்வேறு காதல் ஜோடிகள் கலந்து கொண்டு அவர்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் வெற்றி பெற்ற ஜோடிக்கு PS5 computer game console பரிசாக வழங்கப்பட்டுள்ளது.