இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் காணப்படும் பெண் தனது வீட்டின் கதவை சாவியை கொண்டு திறக்கிறார். கதவை மெல்லமாக திறக்கும் அந்தப் பெண் வீட்டின் வாசலில் புலி ஒன்று நிற்பதை கண்டு அஞ்சுகிறார். அடுத்த நொடியை அந்த புலி பெண்ணைத் தாக்க பாய்கிறது. ஆனால் அதற்குள் சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் கதவை சட்டென மூடி விடுகிறார். இதனால் அவர் பெரும் ஆபத்திலிருந்து தப்பி விடுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.