ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் வி.சி.சந்திரகுமார் நாளை (பிப்.10) பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில், வி.சி.சந்திரகுமார் நாளை காலை 10 மணிக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.