தமிழ் யூடிபர்களில் மிகவும் பிரபலமானவர் VJ சித்து. இவர் "VJ SIDDHU VLOGS" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். இந்த சேனலுக்கு 40 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சமீபத்தில் சித்து வெளியிட்ட ஒரு வீடியோவில், நிக்கல் குந்தல் விளையாட்டின்போது தனது நண்பர் ஒருவரை கீழே தள்ளி அடித்து, மிதித்துள்ளார். இந்த வீடியோவை X தளத்தில் ஒருவர் பதிவிட்ட நிலையில் பலரும் சித்துவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.