உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில், பிப்ரவரி 5 அன்று காளிசேனா உறுப்பினர்கள் உள்ளூரில் இயங்கிவரும் சந்தையை "சனாதனி சந்தை" என்று அறிவித்து முஸ்லீம் விற்பனையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும், அவர்கள் விற்பனையாளர்களின் பெயர்கள் மற்றும் மதம் குறித்து கேள்வி கேட்டு, முஸ்லிம் விற்பனையாளர்கள் திரும்பி வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் திரும்பி அங்கு கடை போட்டால் அடித்து விரட்டப்படுவீர்கள் என கூறியுள்ளனர்.