சென்னை: ஆவடி அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற முதியவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்நிலை குடிநீர் தொட்டியில் இறங்கி, வால்வை மூட முயன்ற போது முனுசாமி (55) என்ற முதியவர் தொட்டியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விஷ வாயு தாக்கி இறந்தாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.