கட்டாக்: இங்கிலாந்து அணிகெதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசினார். 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். கில் நிதானமாக விளையாடிய ரோகித் அதிரடியாக விளையாடினார். வெறும் பந்துகளில் அரைசதம் கண்ட ரோகித் 76 பந்தில் சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இது, சர்வதேச ஒரு நாள் போட்டியில் அவர் அடிக்கும் 32-வது சதமாகும்.