காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் காலில் சதை கிழிந்த நிலையில், போதை ஆசாமி செல்போனில் வீடியோ பார்த்துள்ளார். கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர், பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில், தேவதாஸின் காலில் சதை கிழிந்து, ரத்தம் ஓடியது. போதையில் இருந்த அவர், இதனை பொருட்படுத்தாதமல், செல்போனில் வீடியோ பார்த்துள்ளார். அங்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.