சென்னை தலைமை செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எல்லாம் நன்மைக்கே” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். டெல்லி சென்ற அதிமுக இபிஎஸ், மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். பாஜகவுடன் கூட்டனி இல்லை என இபிஎஸ் கூறி வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.