சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட கோரிக்கை
பேராவூரணி |

சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட கோரிக்கை

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளத்தில் புகழ்பெற்ற ஒளஷதபுரீஸ்வரர் என்ற சிவன் ஆலயம் உள்ளது. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நிர்மானிக்கப்பட்ட இந்த சிவலாயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினசரி பக்தர்கள் வந்து செல்வார்கள். பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மருங்கப்பள்ளம், சிவன் கோயில் சாலையில் கல்லணைக் கால்வாய் நாடியம் கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமடைந்த நிலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் சென்று வருகின்றனர்.   பக்கவாட்டில் தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குருவிக்கரம்பை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாற்றுப்பாதையாக இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் உள்ள பக்கவாட்டு சுவர் இல்லாத, சேதமடைந்த பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.   எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.