வாக்கு வங்கி அரசியலுக்காகவே மு.க. ஸ்டாலின் இந்தி மொழியை எதிர்ப்பதாக உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். மேலும், “தாய்மொழி நாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கக் கூடாது. தமிழ் மிகவும் பழமையான, தொன்மையான வரலாற்றை உள்ளடக்கிய மொழி. உ.பி., பல்கலைக் கழகங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலை.,களில் இந்தியை கற்பிப்பதில் என்ன பிரச்னை உள்ளது?” என்றார்.