வாழ்நாள் முழுவதும் கலை கனவுகள் கண்ட இளைஞர் மனோஜ் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நடிகர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், "மனோஜ் ஒரு நல்ல கலைஞன். அவர் மரணம் சற்றும் எதிர்பாராதது. பாரதிராஜாவின் பாதி உயிராக திகழ்ந்த மனோஜ் பாதி வயதிலேயே காலமானது எங்களுக்கு கண்ணீரை தருகிறது. பாரதிராஜாவின் சோகம் மிகப்பெரியது. சோகத்தில் அவர் துடிப்பதை உணர்கிறேன்” என்றார்.