

சுவாமிமலையில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்
சுவாமிமலையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் 100 கிலோ எடையில் உலோகத்தால் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது, உழவர் திருநாளாகிய பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை ஊர்வலம் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான தப்பாட்டம், சிலம்பாட்டத்துடன் சுவாமிமலை முருகன் கோவில் தெற்கு வாயிலில் தொடங்கி நான்கு வீதி சுற்றி தெற்கு வீதியில் முடிவடைந்தது. தொடர்ந்து திருக்குறள் மாமுனிவர் விண்ணப்பம் பண்டைத்தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.