சென்னையில் நடந்த செயின் பறிப்பு நிகழ்வுகள் அடுத்த 24 மணி நேரத்தில் பல முக்கிய திருப்பங்களை கடந்துவிட்டிருக்கிறது. இதில் தொடர்புடைய 2 பேர் விமானத்தில் கைது, நள்ளிரவில் ஒருவர் என்கவுண்டர் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரின் ஆதார் சான்று சரியாக இல்லாததால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு டிக்கெட் கவுன்டரில் காத்திருந்த அவரை காவல்துறை கைது செய்துள்ளது.