கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில், இளைஞர் பைக்குடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். தண்ணீர் கசிவு காரணமாக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதனை அறியாமல் பைக்கில் வேகமாக சென்ற இளைஞர், பள்ளத்தில் விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளங்கள் தோண்டினால் உரிய தடுப்புகள் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.