ஐபிஎல் 18ஆவது சீசனில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெற உள்ள 6ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ள் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. எனவே இன்று நடைபெறும் ஆட்டத்தின் மூலம் வெற்றி கணக்கை தொடங்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.