நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனை இழந்த பாதிப்பால் இயக்குநர் பாரதிராஜா மிகவும் கலங்கி போயுள்ளார். மனோஜ் சடலம் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகில் அமர்ந்த பாரதிராஜா தேம்பி தேம்பி அழுவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.