கோயம்புத்தூரில் உள்ள சிமெண்ட் பொருட்கள் விற்பனை கடையில் தங்கி, ஆறுமுகம் (30) என்பவரும், ஷியாம் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்தனர். நேற்று (மார்ச் 25) மது அருந்திய நிலையில், ஷியாம் டிவி-யில் அதிக சத்தம் வைத்து நிகழ்ச்சி பார்த்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், மதுபாட்டிலால் ஆறுமுகத்தின் தலையில் ஷியாம் அடித்துள்ளார். இதில், உயிருக்குப் போராடிய ஆறுமுக, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.