இயக்குநரும், நடிகருமான மனோஜின் இழப்பை தாங்க முடியாமல், நடிகர் வடிவேலு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், “இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு ஒன்னும் புரியவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாகிவிட்டேன். தமிழ் சினிமாவில் ஆளுமையோட பிள்ளை அவர். கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார் என தெரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என நா தழுதழுத்த குரலில் பேசினார்.