டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இல்லத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட மட்டுமே வந்துள்ளதாக இபிஎஸ் தெரிவித்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.