ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழாவில் தேரோட்டம்

63பார்த்தது
ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது




தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று, கொடிமரத்தின் முன்பு உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்று பங்குனிப் பெருவிழா துவங்கியது
நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஒப்பிலியப்பனுக்கு (திருவிண்ணகரப்பன்) சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

பங்குனிப் பெருவிழாவையொட்டி கடந்த மார்ச் 17ஆம் தேதி
முதல் வரும் 28ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வுகளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி, உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி