தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி பேச மறுத்ததால், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.