தமிழ்நாட்டில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு நிகரான பல அழகிய மலைப்பகுதிகள் உள்ளன. உங்க குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ள நிலையில், இந்த மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லலாம். ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை, சிராயி (சிருமலை) மலை, வால்பாறை, குற்றாலம் போன்ற மலை வாசஸ்தலங்கள் அனைத்தும் ஊட்டியைப் போலவே அழகாக இருக்கும். ஆனால் கொடைக்கானல் மற்றும் ஊட்டியை விட குறைவான கூட்டமே காணப்படும். அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு இவை சிறந்த தேர்வாக இருக்கும்.