தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, மறு விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கும் அமர்வு இந்த மேல்முறையீடு மனுவையும் விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு ஓபிஎஸ்க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.