நடிகர் மனோஜ் மறைவு.. திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி

52பார்த்தது
நடிகர் மனோஜ் (48) இன்று (மார்ச்.25) மாலை 6 மணியளவில் மாரடைப்பால் காலமானார். சமீபத்தில் அவருக்கு இதைய அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தற்போது சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்களான நடிகர் கார்த்தி, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் ரவி மரியா, சேரன், இயக்குனர் ராம், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்ட பலர் வந்தவண்ணம் உள்ளனர். 

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி