Aadhar - Voter ID இணைப்பு.. முக்கிய முடிவு

64பார்த்தது
Aadhar - Voter ID இணைப்பு.. முக்கிய முடிவு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான திட்டத்தை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆதார் எண்ணை கட்டாயமாக்கி இணைக்க முடியாது என்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆதார் எண்ணை வழங்க விரும்பாதவர்கள் தேர்தல் அதிகாரியிடம் நேரில் ஆஜராகி தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக 6பி என்ற விண்ணப்பத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வரவும் தேர்தல் ஆணையம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி